மதுரை மாநகராட்சியின் சார்பாக தீவிர துப்புரவு பணி முகாம்

மதுரை மாநகராட்சியின் சார்பாக தீவிர துப்புரவு பணி முகாம்
X

 வைகை ஆற்றுப் பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்  சார்பில் தீவிர தூய்மைப்பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Cleaning Services - வைகை ஆற்றுப் பகுதிகளில் தீவிர தூய்மைப்பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Cleaning Services - மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.30 ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிகளில் "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" தீவிர தூய்மைப்பணிகளை, மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், (23.07.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின்படி 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" தொடங்கப்பட்டு மதுரை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆழ்வார்புரம் வைகை வடகரை, மதிச்சியம் பகுதிகள், குருவிக்காரன் சாலை பாலம் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஓபுளாபடித்துறை பகுதிகள், ஆர்.ஆர்.மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தூய்மைப்பணி துவக்கத்தில் தூய்மை குறித்த உறுதிமொழியினை மேயர் தலைமையில் அனைத்துப் பணியாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.இந்த தூய்மைப்பணியில் சுமார் 200 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, மாட்டுத்தாவணி நெல் மற்றும் மலர் வணிக வளாக அலுவலகத்தில் ஆதரவற்ற பெண்களுக்கான பயிற்சி பட்டறையினை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்து பேசினார். இந்நிகழ்வில் , துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் முகேஷ்சர்மா, சரவணபுவனேஸ்வரி, சுவிதா, துணை ஆணையாளர் முஜிபூர்ரகுமான், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி நகர்நல அலுவலர் தினேஷ் குமார், சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், சிவசுப்பிரமணியன், வீரன், சுகாதார ஆய்வாளர்கள், உதவிப் பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story