மதுரையில், மருதுபாண்டியர் குருபூஜை! பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை!

மதுரையில், மருதுபாண்டியர் குருபூஜை! பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை!
X

மதுரை தெப்பக்குளத்தில் மருதுபாண்டிய குருபூஜை.

மதுரையில், மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை!

மருது சகோதரர்களின் 222-வது குருபூஜை விழா-தெப்பக்குளம் பகுதியில் மருது சகோதரர்கள் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை:

மதுரை:

மாமன்னர் மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.மருது சகோதரர்களின் 222-வது குருபூஜை விழா சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள அவர்கள் நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது.இதை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் திருஉருவ சிலைகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.தேவரின அமைப்புகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி,பால்குடம் ஆகியவற்றை எடுத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.மேலும் திமுக, அதிமுக,காங்கிரஸ்,பாஜக,

தேமுதிக,பாமக,அமமுக,

அதிமுகஓபிஸ் அணியினர், நாம் தமிழர் கட்சி,விஜய் மக்கள் இயக்கத்தினர் உட்பட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!