மதுரையில் மக்கள் இடையே மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம்

மதுரையில் மக்கள் இடையே மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம்
X

மதுரையில்,  பொதுமக்களிடையே மஞ்சப்பை உபயோகிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

மதுரையில், மஞ்சப்பை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கடல் வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வதித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆனாலும் பல வணிக நிறுவனங்கள் இன்னும் பிளாஸ்டிக் பைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தும் விதமாக, நேற்று மார்ச் 21 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாகவும் மற்றும சமூக ஆர்வலர்கள் பிரமாண்ட மஞ்சள் பையை உடலில் அணிந்து நூதன விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future