திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் டைவ் அடித்த முதியவர் டைடு

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் டைவ் அடித்த முதியவர் டைடு
X

திருப்பரங்குன்றம் சரவணபொய்கை

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் டைவ் அடித்த முதியவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர். ஆறுமுகம்(60). இவர் தனது நண்பர்களுடன், ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிவித்து ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில், இன்று காலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது, மூன்றாவது படிக்கட்டில் இருந்து தலைகீழாக டைவ் அடித்து உள்ளார். அதற்குக் கீழ் படி இருந்ததால், அதை அறியாத ஆறுமுகம், தலையில் பலத்த காயமடைந்த நிலையில், இடத்திலேயே பலியானார்.

இது குறித்து, தகவலறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, அதிக அளவு ஐயப்ப பக்தர்கள் திருப்பரங்குன்றம் வருவதால், சரவணப்பொய்கையில் புனித நீராடி சென்று வருகின்றனர் . இதன் ஆழம் மற்றும் படிக்கட்டுகள் எத்தனை இருக்கிறது என்று அறியாததால், உயிர் பலியை தடுக்க. எச்சரிக்கை பலகை ஒன்று வைக்க வேண்டும் என்பது பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி