மதுரை அருகே அவனியாபுரம் பாலாம்பிகை கோயிலில் மகாதேவ அஷ்டமி பூஜை
மதுரை அருகே அவனியாபுரம் பாலாம்பிகை கோயிலில் நடைபெற்ற மகாதேவ அஷ்டமி பூஜை
மதுரை அருகே அவனியாபுரம் பாலமீனாம்பிகை கோயிலில் மஹா பைரவ அஷ்டமி விழாவை முன்னிட்டு 1008 கலசங்கள், யாக பூஜையுடன் அபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலாம்பிகை திருக்கோயில் உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமி தினமான, வைக்கத்ஷ்டமி எனப்படும் மஹா பைரவ அஷ்டமி விழா நடைபெற்றது. சிறப்பு யாகம் 1008 கலச பூஜை பூஜைகளுடன் பன்னீர்,பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம் சந்தனம் உள்ளிட்ட 18 வாசனை திரவியங்கள் அபிஷேக அலங்காரங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. பைரவர் பிறந்த தினமான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, மகா பைரவ அஷ்டமி விழாவாக கொண்டாடப்படுவதால், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu