மதுரையில் சித்திரைத் திருவிழாவில் இளைஞர் கொலை: போலீஸார் விசாரணை
பைல் படம்
மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் திருவிழா கூட்டத்தில் பத்து பேர் கொண்ட கும்பல் வாலிபரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா இன்று காலை அதிகாலை நடந்தது.திருவிழாவைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். இந்த நிலையில் அதிகாலை 5.52 மணிக்கு அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் வெள்ளத்தில் ஆர் ஆர் மண்டபம்அருகே நின்ற வாலிபர் ஒருவரை பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.அவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக தப்பிச்சென்றுவிட்டனர். கொலை செய்தனர் பின்னர் அந்தக்கும்பல் அங்கிருந்த டீக்கடை மற்றும் கடைகளை சூறையாடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தகவல் அறிந்த பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் மதிச்சியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் எம் கே புரத்தைச் சேர்ந்த வாலிபர் சூர்யா(24 ) என்று தெரிய வந்தது. அவரை கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டத்தில் நடந்த கொலை சம்பவத்தை பார்த்த பக்தர்கள் தலை தெறிக்க ஓடினர். இதனால் திருவிழா கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது.
மற்றொரு வாலிபர் கூட்டத்தில் பிரேதம்
வைகை ஆற்றில் திருவிழா கூட்டத்தில் மற்றொரு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த தகவல் விளக்குத்தூண் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எப்படி இறந்தார். கூட்ட நெரிசலில் இறந்தாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu