அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயண திட்டத்துக்காக அரசு ரூ .1200 கோடி ஒதுக்கியுள்ளது:அமைச்சர் கண்ணப்பன்

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு மத்திய அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்றார் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.
தமிழகபோக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தாவது:
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு மத்திய அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளின் படி நகர்ப் பகுதிக்குள் 2 ஏக்கர் அளவு நிலம் வேண்டி உள்ளது. இதில், நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன எனவே இதுகுறித்து, போக்குவரத்து செயலாளருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்.
கொரோனா காலகட்டத்தில் அரசு எதிர்பார்த்த பெண் பயணிகள் 40% மட்டுமே ஆனால் தற்போது, 65 சதவீத பெண் பயணிகள் அரசு பேருந்தில் பயணிக்கின்றனர். பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பேருந்துகள் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறைக்கும் எண்ணம் இல்லை. கொரோனா காலங்களில் இயங்காத பேருந்துகள் கூட தற்போது, தமிழகம் முழுவதும் இயங்குவதற்கு முயற்சிகள் செய்யப்படுகிறது.
அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயண திட்டத்துக்காக அரசு 1200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, இதுகுறித்து, மறுஆய்வுக் கூட்டத்தில் முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu