மதுரையிலிருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை:பயணிகள் மகிழ்ச்சி

Madurai To Mumbai Flight Service
மும்பையிலிருந்து 98 பயணிகளும் மதுரையிலிருந்து மும்பைக்கு 102 பயணிகளும் பயணம் செய்தனர்.மதுரை விமான நிலையத்தில் புதிய ஏர் இந்தியா விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பளிக்கப்பட்டது .மதுரை விமான நிலையத்தில், இருந்துமும்பை விமான நிலையத்திற்குசெல்லும் புதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு மதுரை விமான நிலையத்தில் தண்ணீர் பீச்சி வரவேற்பளிக்கப்பட்டது.
மேலும்,விமான சேவை துவக்கிய ஏர் இந்தியா மதுரை நிலைய அலுவலர் ஆனந்த் ராஜ் மற்றும் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மதுரை விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் கருப்பசாமி, மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் கமல் சிங் ஆகியோர் புதிய விமான சேவையை வரவேற்கும் விதமாக, மதுரை விமான நிலையத்தில் கேக் கொண்டாடினர்.
Madurai To Mumbai Flight Service
முதன் முதலாக பயணம் செய்தவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்த விமான நிலைய அதிகாரி.
மும்பையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் 98 பயணிகளும் மதுரையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் 102 பயணிகளும் பயணம் செய்தனர்.முன்னதாக, மும்பை சென்னை மதுரை வழியாக விமான சேவை இயக்கப்பட்டு வந்தது.
கடந்த ௨௩ ந்தேித் முதல் மதுரை மும்பை விமான நேரடி சேவை துவங்கியது. இதனால் தென்மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். வெளிநாடுகளில் வேலை செய்வோர் நேரடியாக மும்பை வந்து அங்கிருந்து மதுரை வந்தடைய எளிதான பயணமாக இருக்கும் என பலரும் தெரிவித்தனர். சென்னைக்கு செல்லாமல் தற்போது மதுரையிிலிருந்தே மும்பைக்கு பயணம் செய்யலாம் என்பதால் பயணிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu