மதுரை மாநகராட்சி சார்பில் பாலம் கட்டும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு..!

மதுரை மாநகராட்சி சார்பில் பாலம் கட்டும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு..!
X

பாலம் கட்டும் பணியை  அதிமுக எம்.எல்.ஏ. ராசன் செல்லப்பா ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தான், பாலம் கட்டும் பணி, சாலை சீரமைப்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டதாக, வே. ராசன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மதுரை அருகே திருநகர் அமைதி சோலை நகரில், மதுரை மாநகராட்சி சார்பில் ரூ. 40 லட்சத்தில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணியை அவர் ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் கூறியது:

மதுரையை பொறுத்தமட்டில் பாலங்கள் பல கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. சாலைகளும் பல துரிதமாக சீரமைக்கப்பட்டன. மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தமட்டில், மக்களின் கோரிக்கையை ஏற்று திட்டங்கள் நிறை வேற்றப்படும் என்றார். முன்னதாக, திருநகர் அமைதி சோலை நகரில் ரூ 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலத்தினை ராஜன் செல்லப்பா எம்எல்ஏ இன்று ஆய்வு செய்தார் . இதில், மாநகராட்சி பொறியாளர் முனீர் அகமது , இளைஞர் அணி, பைக்கில் ரமேஷ் அதிமுக ஒன்றிய ச் செயலாளர் நிலையூர் முருகன், துணைச் செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் எம் ஆர் குமார், இளைஞரணி பார்த்திப ராஜன், ராஜா கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!