நோயாளி புகார்: திருப்பரங்குன்றம் அரசு மருத்துவரிடம் உயரதிகாரிகள் விசாரணை

நோயாளி புகார்: திருப்பரங்குன்றம் அரசு மருத்துவரிடம் உயரதிகாரிகள் விசாரணை
X

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தனது தாயை 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்ததாக சுந்தர்ராஜன் என்பவர் திருப்பரங்குன்றம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செல்வராஜ் மீது மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட மருத்துவ ஊரக நலத்துறை இணை இயக்குனர் வெங்கடாச்சலம் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தலைமை மருத்துவர் செல்வராஜிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இணை இயக்குனர் வெங்கடாச்சலம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீதான புகாரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விசாரணை முழுமையாக முடித்த பின்னரே குற்றச்சாட்டு தொடர்பான உண்மைத் தன்மையின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் தலைமை மருத்துவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. இங்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவ மனையில் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டது. சாதாரண நாட்களில் இங்கு செல்லும் நோயாளிகளை கனிவுடனும் மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர். எந்த ஒரு நோயாளிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என நோக்கத்தில் தலைமை மருத்துவர் நேரடியாக ஒவ்வொரு நோயாளியும் பரிசோதித்து அதற்கான சிகிச்சையையும் அளித்து வந்தார் என்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் உள்நோக்கம் இருக்கலாம் என்ற கருத்தை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர்.

Tags

Next Story