மதுரை அருகே, கோயிலில் விடிய, விடிய கறி விருந்து: பக்தர்கள் பரவசம்.
மதுரை அருகே கோயிலில் விடிய, விடிய கறி விருந்து:
மதுரை:
வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில் திருவிழா 500 ஆடு வெட்டி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு விடிய விடிய சமபந்தி விருந்து; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஒரு கடாயில் தொடங்கிய திருவிழா 500 ஆடுகள் வெட்டி விடிய விடிய அன்னதானம் வழங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்த கழுங்கடி முனியாண்டி கோவில் திருவிழாவாகும்.
மதுரை அவனியாபுரம், விமான நிலையம் செல்லும் சாலையில், உள்ள வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில் 37- ஆவது ஆண்டு விழா 500 ஆட்டு கிடாய் நேற்று இரவு முழுவதும் வெட்டி காலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கறிவிருந்து அன்னதானமாக வழங்கும் திருவிழா நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் விமான நிலையம் செல்லும் சாலையில், வெள்ளக்கல் கிராமத்தில் பழமை வாய்ந்த கழுங்கடி முனியாண்டி கோவில் உள்ளது.
இங்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, நேர்த்திக்கடனாக முனியாண்டி சுவாமிக்கு ஆட்டுகிடா வெட்டுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.
இந்த 37-வது கழுங்கடி முனியாண்டி கோயிலில், கெடா வெட்டு திருவிழா இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கறி விருந்து அன்னதான திருவிழா நடைபெறும். பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட ஆடுகளை , இரவு முழுவதும் வெட்டி சமைத்து காலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்தத் திருவிழாவில் நேற்று இரவு கிடாவுடன் பொங்க பானை ஊர்வலம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்ட்டு கழுங்கடி முனியான்டி கோவில் முன்பு ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில் பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம், காரியபட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள ஊர்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கழுங்கடி முனியாண்டி கோவில் வேண்டியது நிறைவேறும் என்றும் கோவிலில் முதல் முதலாக எங்கள் பிரச்சனை தீர ஒரு ஆட்டுக்கிடா வெட்டி ஆரம்பித்த கோவில் திருவிழா, தற்போது ,500 க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்டு இந்த ஆட்டுக் கிடாய் கறி விருந்து திருவிழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு கழுங்காடி முனியாண்டி கோவிலில் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 480 ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டு , கறி விருந்து காலையில் தொடங்கி இரவு வரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu