மதுரையிலிருந்து இலங்கைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு விமான சேவை தொடக்கம்

மதுரையிலிருந்து இலங்கைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு  விமான சேவை தொடக்கம்
X

இலங்கையிலிருந்து மதுரைக்கு வந்த  ஸ்ரீலங்கா விமானம்.

இலங்கையிலிருந்து விமானம் மூலம் மதுரை 36 பயணிகள் வந்தனர்

இலங்கையிலிருந்து ஒன்றரை வருடத்திற்கு பின் விமானம் மூலம் மதுரை வந்த 36 பயணிகள் வந்தனர்.

மதுரை மாவட்டம், மதுரை விமான நிலையத்தில் கடந்த கொரோனா தொற்று முதல் அலை (மார்ச் 18. 2020)முதல் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது . ஒன்றரை வருடத்திற்கு பின் தற்போது விமான சேவை தொடங்கியது. இதைத்தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம், 38 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். மதுரை விமான நிலையத்தில் உள்ள சுகாதார துறை அதிகாரிகள் சார்பில் கொரான தொற்று பரிசோதனை நடைபெற்றது. இதேபோல், மதுரையில் இருந்து இலங்கைக்கு 76 பயணிகள் புறப்பட்டு சென்றனர்.கொரோனா பரிசோதனை சான்று மற்றும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி