இ- சேவை மையங்களில் தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் ராமச்சந்திரன்

இ- சேவை மையங்களில் தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் ராமச்சந்திரன்
X
அனைத்து இ-சேவை மையங்களிலும் தவறுகள் நடப்பதில்லை. ஆனால், ஒரு சில இ- சேவை மையங்களில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால், அனுமதியை ரத்து செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இ-சேவை மையங்களில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன்.

மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் மேலும் கூறியதாவது:

நிர்வாக வசதிக்காக எப்படி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதோ அதைப்போல பெரிய வட்டங்களையும் பிரித்தால்தான், நிர்வாக வசதி சரியாக இருக்கும் என்கிற எண்ணம் அரசுக்கு இருக்கிறது. இதை, முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவரது ஆணைக்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து இ-சேவை மையங்களிலும் தவறுகள் நடப்பது இல்லை. ஒரு சில இ- சேவை மையங்களில் முறைகேடு நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டு, மேலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

விமான நிலைய விரிவாக்கப் பணி ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது. அதற்காக 615 ஏக்கர் நிலம் கையகப்படுத்த விருக்கிறோம். அதில், 460 ஏக்கர் பட்டா நிலங்களும் 161 ஏக்கர் புறம்போக்கு நிலங்களும் உள்ளது. அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து 200 கோடி தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் அரசுத் துறைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. அதற்குரிய துறைகளில் அனுமதி பெற்று முதலமைச்சரின் அனுமதியுடன், விரைவில் மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணி தொடங்கப்படும்.

ஒப்படைக்கும் நில உரிமையாளர்களுக்குகான நிவாரணம் அளிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, அதை அவர்களுக்குக் கொடுத்து விட்டோம். இதற்கு முன்பாக இருந்த அதிகாரிகள் எப்படி பேசி முடித்தார்களோ அந்த அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும். நாங்கள் புதிதாக எதுவும் குழப்ப விரும்பவில்லை. எங்களைப் பொருத்த அளவில், விரிவாக்கப் பணிகள் விரைவில் நடக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருக்கிறது. அதனால், முதலமைச்சரின் அனுமதி பெற்று இந்த பணிகள் துவங்குவதற்கான முயற்சிகளை செய்வோம் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்