மழை நீர் தேங்கிய பகுதிகளில் மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆய்வு
மதுரையில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
மதுரை மாநகராட்சி சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை ஆணையாளர் தினேஷ் குமார் ஆய்வு செய்தார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நேற்று பெய்த கன மழையினால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றுதல், பாதாள சாக்கடை ஏற்பட்டுள்ள அடைப்புக்களை சரிசெய்யும் பணிகள், கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதை, ஆணையாளர் ச.தினேஷ் குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நேற்று இரவில் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியிருந்த ஆபிசர்ஸ் டவுன்,மெயின் தெரு பகுதிகள், குலமங்கலம் மெயின் சாலை பகுதி மற்றும் திருவேங்கடபுரம் 2வது தெரு, காமராஜர் சாலை 2வது தெரு, பூந்தமல்லி நகர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரு, நரிமேடு சத்தியமூர்த்தி நகர், அவ்வையார் தெரு, பந்தல்குடி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து வார்டு எண்.24, 26, 28 மற்றும் 32க்குட்பட்ட செல்லூர் ,பந்தல்குடி வாய்க்காலில் இருந்து வெளியேறும் உபரிநீர் குறித்தும், ஆழ்வார்புரம் தென்கரை பகுதியில் உள்ள வைகை ஆற்றில் செல்வது, மண்டலம்-2 வார்டு எண்.2 கரிசல்குளம் பாண்டியன் நகர், மற்றும் திருமால் நகர் விளாங்குடி கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று பெய்த கனமழையினால் முக்கிய சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுதல், மழைநீர் வாய்க்கால்களில் தேங்கி உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல், பாதாள சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்களை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை வார்டு பொறியாளர்கள் விரைந்து மேற்கொண்டு முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ்,செயற் பொறியாளர்கள் சுந்தரராஜன், சேகர், உதவி செயற் பொறியாளர்கள் மயிலேறிநாதன், ஆரோக்கிய சேவியர், காமராஜ், மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, உதவிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu