நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுவதை பார்வையிட்ட மதுரை எம்பி வெங்கடேசன்

நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுவதை பார்வையிட்ட மதுரை எம்பி வெங்கடேசன்
X

மதுரையிலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் வெள்ள நிவாரண பொருட்களை மதுரை எம். பி. வெங்கடேசன் பார்வையிட்டார்

தூத்துக்குடி - திருநெல்வேலி சாலை துண்டிக்கப் பட்டிருக்கிறது. பல கிராமங்கள் தனித்தனி தீவாக மாறியிருக்கின்றன

மதுரையிலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் வெள்ள நிவாரண பொருட்களை மதுரை எம். பி. வெங்கடேசன் பார்வையிட்டார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து 63 முறை சுமார் 48 ஆயிரத்து 763 கிலோ எடையள்ள உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.மதுரை விமான நிலையத்திலிருந்து, இந்தியவிமானப்படை, கடலோர காவல் படை மற்றும் கப்பற்படையின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மதுரை விமான நிலையத்தில் இருந்து 63 முறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 48ஆயிரத்து 7 நூற்று 63 கிலோ உணவுப் பொருட்கள் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் , மதுரை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையம் பகுதியில் இருந்து தூத்துக்குடி வெள்ள நிவாரண பணிக்காக கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்களை இன்று காலை பார்வையிட்டார்.

மதுரையிலிருந்து தினசரி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது .அவ்வாறு ,அனுப்பப்படும் பொருட்களை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அரசு அதிகாரிகள் அவ்வப்போது தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் வரலாறு மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. காயல் பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை கொட்டியிருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 50 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்திருக்கிறது.

அதனால் தூத்துக்குடி - திருநெல்வேலி சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவாக மாறியிருக்கின்றன. இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுக்கு பிறகு தான் கடுமையான மழை பெய்தது என்பதாலும், இவ்வளவு அதிக மழை பெய்யும் என்பதை எவரும் எதிர்பார்க்காததாலும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்து கொண்டிருப்பார்களா? என்பது தெரியவில்லை. அவர்களுக்குத் தேவையான பால், ரொட்டி, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

மழை வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகமே மழை - வெள்ளத்தால் சூழப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால், பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க அதிக எண்ணிக்கையில் நிவாரண முகாம்கள் தேவைப்படக் கூடும். அவற்றை உடனடியாக அமைத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வந்து அங்கு தங்க வைத்து தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும். காயல்பட்டினத்தில் பெய்துள்ள 95 செ.மீ மழை என்பது, வழக்கமான காலத்தில் அங்கு ஆண்டு முழுவதும் பெய்யும் மழையை விட அதிகம் ஆகும் என எதிர்க்கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!