மதுரை மீனாட்சியம்மன் கோவில் மாசி மண்டல திருவிழா சுற்று கொடியேற்ற நிகழ்ச்சி
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மாசி மண்டல திருவிழாவின் சுற்றுக் கொடியேற்ற நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மாசி மண்டல திருவிழாவின் சுற்றுக் கொடியேற்ற நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மாசி மண்டல திருவிழா தான் அதிக நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். கடந்த ஜனவரி மாதம் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. அன்றைய தினத்தில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர் சாமிகள் தினமும் சாமி சன்னதி 2-ஆம் பிரகாத்தில் வலம் வந்தனர்.
இதையொட்டி சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் 8 இடங்களில் சுற்று கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி சாமி சன்னதி கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் எழுந்தருளினர், அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் தினமும் காலை, இரவு என இரு வேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள உள்ளனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து சித்திரை வீதிகளில் வலம் வருவதற்கு பதிலாக கோவிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் வலம் வருவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விழாவில் சட்டத்தேரில் சப்தாவர்ண சப்பரத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வர உள்ளனர். தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu