தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக தொழில் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்:
தொழில் துறையில் முதலீடு அதிகரிப்பது குறித்த கேள்விக்கு:
ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோடியாவது மகிழுந்தினை ரோல் அவுட் செய்தபோது தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்குவதே தமிழக அரசின் லட்சியம் என முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு இணையாக தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஏற்படுத்துவதற்கு தமிழக தொழில்துறை முன்னெடுக்கும். பல நிறுவனங்களின் தொழில் முதலீடுகளை தமிழகத்தில் செய்ய வேண்டும் என பல தொழில் அதிபர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வருகின்றனர்.
சிங்கப்பூர் , நார்வே முதல் டென்மார்க் தூதர்கள் வரை தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர்.
கடந்த இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த கேள்விக்கு:
எந்தெந்த வகையில் அந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்பது குறித்து எம்.ஒ.இ. ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
3 லட்சம் கோடி முதல் 5 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. என்று கூறி வருகிறார்கள். ஆனால், எந்த அளவுக்கு அது புரிந்துணர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மேலும், இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.
தமிழகத்தில் அதிகமான தொழிற்சாலைகள் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு:
சட்டசபையில் வெளியிடப்பட்டுள்ள ஆளுநர் அறிக்கையில் வடமாவட்டங்களுக்கான தொழிற்சாலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் விருதுநகரில் சிப்காட் வரவுள்ளது. தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா மற்றும் ரிபைனரி வர உள்ளது. தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியிலும் இந்த அரசு அக்கறையோடு இருக்கிறது என, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu