மதுரையில் பலத்த மழை குளம் போல மாறிய ரோடுகளால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
Madurai Heavy Rain Road Damaged
மதுரை நகரில் இன்று காலை முதலே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மதுரை நகரில் கடந்த சில நாட்களாக வானம், மேக மூட்டத்துடன் காணப்பட்டது .
இன்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கிறது. அதிகாலைப் பொழுதில் கடும் பனிப்பொழிவும், அதைத் தொடர்ந்து, மழையும் பெய்தது. மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், கள்ளிக்குடி, அழகர் கோவில், காஞ்சிபுரம் பேட்டை, சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம், திருப்பாலை, கருப்பாயூரணி, வரிச்சூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் சால் மழை பெய்து வருகிறது.
இதனால், மதுரை நகரில் பல தெருக்களில் சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளதால் இரவில் கொசு தொல்லை அதிகரித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் காதர் மொய்தீன் தெரு, வீரவாஞ்சி தெரு, அன்னை அபிராமி தெரு, சித்திவிநாயகர் கோயில் தெருக்களில், மழை நீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து சாலையில் தேங்கி உள்ளது.
மேலும் ,மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், வண்டியூர், யாகப்ப நகர் பகுதிகளில், சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி முன் வராததால், இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையில் செல்ல பெரும் இடையூறாக உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். மதுரை மாநகராட்சி நிர்வாகமானது சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, மேயர் மற்றும் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர்.
புயல் ,மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மூன்றாவது நாளாக இன்றும் மதுரை விமான நிலையத்திலிருந்து நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல மூன்று ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிலையில் உள்ளது.
வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதால் காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ஹெலிகாப்டர்கள் தாமதமாக 7:30 மணிக்கு புறப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று ஹெலிகாப்டர்களில் 3ஆயிரத்து 180 கிலோ உணவுப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.
மதுரை விமான நிலையத்தில், இருந்து புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு மூன்றாவது நாளான இன்று (21.12.23) காலை 4.30 மணிக்கு மத்திய தொழிலில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறை,வருவாய்த்துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டரில் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
காலை ஆறு மணிக்கு புறப்பட வேண்டிய ஹெலிகாப்டர் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதால் காலை 7:30 மணிக்கு கிளம்புவதாக கூறப்பட்டது.
தற்போது, 3 ஆயிரத்து 180 கிலோ எடையுள்ள உணவு, குடிநீர், மருத்துவ பொருட்களை ஏற்றி தயார் நிலையில் 3 ஹெலிகாப்டர்களும் தூத்துக்குடிக்கு புறப்பட தயாராக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu