இந்திய அணி வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்..!
இந்தியா வெற்றிபெற்றதை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
உலக கோப்பை T20கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக மதுரையில் ரசிகர்கள் கிரிக்கெட் மைதானம் போன்ற கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
மதுரை:
டி. 20உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ஒட்டி, மதுரை ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் வீரர்கள் கிரிக்கெட் ஸ்டேடியம் போல தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடினர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய 9வது டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், தென் ஆப்ரிக்க அணியுடன் மோதிய இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2007க்கு பிறகு, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இரு அணிகளும் நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த முறை ஒருநாள் உலககோப்பை போட்டியில் பைனல் வரை வந்து தோற்றதால், ஏக்கத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றியை இந்தியா முழுதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர்.
மதுரை கோவில் பாப்பாகுடி, ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக, நட்புறவு கிரிக்கெட் போட்டியும் நடத்தினர். பின்பு, கிரிக்கெட் மைதானம், பேட் ஸ்டம்ப், பந்து மற்றும் நீல நிற ஜெர்சி உடன் வித்தியாசமாக உருவாக்கப்பட்ட கேக் வெட்டி சக வீரர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu