பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை . 5- ம் தேதி தமிழகம் முழுவதும் தேமுதிக ஆர்ப்பாட்டம்:
மதுரை விமானநிலைய வாசலில் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
விலை உயர்வை கண்டித்து வரும் ஜூலை 5-ம் தேதி தேமுதிக சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.
நேற்று மதுரை வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை மற்றும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
எனவே, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பாக இதனைக் கண்டித்தும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் ஜூலை 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். தேமுதிக கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு நிறைய பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் எங்களுக்கு சிறப்பான நட்புறவு உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தேதி அறிவித்த பின்பு கட்சியின் ஆலோசனை கூட்டத்தை கூட்டி தேமுதிக தனது நிலைப்பாட்டினை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu