விபத்தில் இளைஞர் உயிரிழப்பு உள்ளிட்ட மதுரை மாவட்ட க்ரைம் செய்திகள்

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு உள்ளிட்ட மதுரை மாவட்ட க்ரைம் செய்திகள்
X
விபத்தில் இளைஞர் உயிரிழப்பு உள்ளிட்ட மதுரை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.

மதுரை மாடக்குளம் மெயின்ரோடு வி.கே.பி.நகர் மீனாட்சி நகரைச்சேர்ந்தவர் சக்திவேல் (வயது49.).இவர் பால் கறக்கும் தொழில்செய்து வந்தார்.சம்பவத்தன்று சைக்கிளில்சென்றவர் கீழேவிழுந்து காயமடைந்தார். அதற்கு மருந்தும் போட்டுள்ளார்.ஆனாலும் வலி இருந்து வந்தது.இதனால், வீட்டில் தனியாக இருந்தபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் குறித்து, அவரது மனைவி செல்வி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவுசெய்து, சக்திவேலுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை சிந்தாமணியைச்சேர்ந்தவர் ராமர் மகன் கண்ணன் (வயது39.) இவர் அப்பளக்கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார்.இவர் அரசுவேலை வாங்க முயற்சித்து வந்தார்.இவருக்கு பழைய விளாங்குடியைச சேர்ந்த கௌதம்சந்திரன் என்பவர் அறிமுகமானார். அவர் ,அரசாங்க வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதற்காக 2022 டிசம்பர் முதல் பல்வேறு தவனணகளில் ரூ. 6லட்சம் வாங்கியுள்ளார்.ஆனால், கூறியபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. அதற்காக வாங்கிய பணத்தையும் திருப்பியும் தரவில்லை. அவரை மோசடிசெய்தது தெரியவந்தது. இது குறித்து, கண்ணன் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கௌதம் சந்திரன் மீது, வழக்குப் பதிவுசெய்து, இந்த மோசடிகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

விருதுநகர் சூலக்கரை கணபதிகாலனியைச்சேர்ந்தவர் சந்திரபோஸ் மகன் மணிகண்டன்( 24.)இவர் பிளாஸ்டிக் மற்றும் பாத்திரவியாபாரம் செய்து வந்தார்.வியாபாரத்திற்கு மதுரையில் சரக்குகள் வாங்கி செல்வார்.அதற்காக அவர் மதுரைக்கு பைக்கில் சென்றார்.அருப்புக்கோட்டை மெயின்ரோடு பூந்தோட்டம் நகர்வழியாக அவர் சென்றார்.அப்போது, அந்த வழியில் பின்னோக்கிசென்ற லாரி அவர் மீது மோதியது.இதில் அவருக்கு பலமாக அடிபட்டது.உயிருக்கு போராடிய மணிகண்டனை 108ஆம்புலன்ஸ்முலம் மதுரை அரசுமருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, அவர் அப்பா சந்திரபோஸ் போக்குவரத்து புலனாய்வு பிரிவுபோலீசில் புகார் செய்தார். போலீசார்,லாரி டிரைவர் கோவில்பட்டியைச் சேர்ந்த சுந்தரராஜ் (49). என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை மேல மடை தெருவைச் சேர்ந்தவர் வண்ணக்கல்(71.)இவர் தனது மகள் சரண்யாவுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.சரண்யா வண்டியை ஓட்ட இவர் பின்னால் அமர்ந்து சென்றார்.இவர்கள் வண்டியூர் எழில் நகரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் சென்ற பள்ளிப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது.இந்த விபத்தில் இருவரும் கீழே விழுந்தனர்.இதில் பலமாக அடிபட்டு வண்ணக்கல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, அவரது மகன் சீனிவாசன் போக்குவரத்து போலீசில் புகார்செய்தார். போலீசார் ,பஸ்டிரைவர் புட்டுத்தோப்பு செக்கடி தெருவைச்சேர்ந்த ராஜா (53). என்பவர் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை அருகே கொடிமங்கலம் அக்ரகாரத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி பத்மாவதி (45.) கணவர் குமரேசன் ஆட்டோ ஓட்டிவருகிறார். சம்பவத்தன்று, பஸ்ஸில் பயணம்செய்தபோது பத்மாவதி அணிந்திருந்த 6பவுன் தங்கச்சங்கிலி தொலைந்து விட்டது.இதனால் ,அவர் மனக்கவலையில் இருந்துவந்தார்.இதன் காரணமாக அவர் விஷம்குடித்து வீட்டில் மயங்கிக்கிடந்தார்.

அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, கணவர் குமரேசன் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார், வழக்குப்பதிவு செய்து பத்மாவதி சாவு குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!