Madurai District Crime News மதுரை மாவட்ட கிரைம் செய்திகள் போலீஸார் விசாரணை
ஆயுதங்களுடன் 2 வாலிபர்கள் கைது.
கோ.புதூரில் கொலைதிட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கோ.புதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர்.இவர், போலீசாருடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள்
வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சென்றபோது, முட்புஊருக்குள் பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்களை பிடித்தனர்.
அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவர்கள் கொலைத்திட்டத்தில் பதுங்கி இருந்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிந்தது.
அவர்கள்,கே.புதூர் ராம வர்மா நகர்ராஜேந்திரன் மகன் அன்புராஜா (28),டேவிட் மகன் பாட்சா (26)என்றும், தெரியவந்தது.
அவர்களை, போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு:
திருமங்கலம் சின்னக்கடை வீதிமாரியம்மன் கோவில்தெருவைச்சேர்ந்தவர் சிவக்குமார் 54.இவர் அந்தப்பகுதியில் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.வழக்கம்போல் இரவு பூஜை முடித்து வீட்டிற்குச் சென்றவர் மறுநாள் கோவிலை திறக்கச்சென்றார்.
அப்போது கோவிலில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.அங்கு உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ10ஆயிரத்தை மர்ம நபர் திருடிச்சென்று விட்டார்.இது குறித்து, பூசாரி சிவக்குமார் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த திருட்டு ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
வீட்டை உடைத்து நகை திருட்டு:
புதுக்கோட்டை கீழக்குயில்குடி ரோட்டைச்சேர்ந்தவர் பகவதி(40.)இவர் சொந்தமாக வீடுகட்டியுள்ளார்.இதனால் ,
அந்த வீட்டில் குடியேறுவதற்காக வீட்டு உபயோகப்பொருட்களை மாற்றிவிட்டு ஏற்கனே குடியிருந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.அதிகாலை எழுந்துபார்த்தபோது, வீட்டின்கதவு உடைக்கப்பட்டிருந்து.அங்கு பீரோவில் வைத்திருந்த இரண்டரை பவுன்தங்கநகை மறற்றும் வெள்ளிக்கொலுசைஐ, மர்ம ஆசாமி திருடிச்சென்றுவிட்டார்.இந்த திருட்டு குறித்து பகவதி நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து ,திருட்டு ஆசாமியை தேடிவருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu