மின்சாரம் தாக்கி பெண் மரணம்: போலீஸார் விசாரணை

மின்சாரம் தாக்கி பெண் மரணம்:   போலீஸார் விசாரணை
X

பைல் படம்

மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

சிறையில் இருக்கும் கணவரை ஜாமீனில் கொண்டுவர முடியாத வேதனையில் மனைவி தற்கொலை:

மதுரை அண்ணாநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி பிச்சையம்மாள் என்ற கவிதா 37. இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ஹிந்துபுரத்தி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது கணவன் மனைவிக்கும் இடையே நடந்த சண்டையில் மகள் மீது கணவர் ஆசிட் ஊற்ற முயன்றார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இதை அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.இந்த நிலையில் அவரது மனைவி கவிதா ஜெய்ஹிந்துபுரத்திலிருந்து அண்ணாநகர் யாகப்பா நகர் பகுதியில் குடியேறினார்..

தனது கணவரை ஜாமினில் வெளியே கொண்டுவர முடியவில்லையே மன வருத்தத்தில் இருந்து வந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த போது தனக்குத்தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீயில் கருகி உயிருக்கு போராடிய நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிச்சையம்மாள் என்ற கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய அம்மா பஞ்சவர்ணம் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவருடன் கருத்து வேறுபாடு: இளம்பெண் தற்கொலை

மதுரை, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கிருஷ்ணபாளையம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி பிரியா 27. இவர்களுக்கு பத்து வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர்களுக்குள் குடும்பப் பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து தந்தை வீட்டில் பிரியா வசித்து வந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் எலிவிஷத்தை தின்று மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பிரியா உயிரிழந்தார். இதுகுறித்து அவர் தந்தை சிவனேசன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் இறப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ் எஸ் காலனியில், மின்சாரம் தாக்கி பெண் மரணம்

மதுரை எஸ் எஸ் காலனியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விராட்டிபத்து முத்துத் தேவர் காலனியை சேர்ந்தவர் தமிழரசி 52. இவர் பாத்ரூமில் குளிக்கச் சென்றார். அவர் அங்கிருந்த கொடிக் கம்பத்தை தொட்ட போது, அதில் மின்சாரக்கசிவு இருந்ததால் மின்சாரம் தாக்கி தமிழரசி உயிரிழந்தார்.

அப்போது அவர் அண்ணனன் மகள் அபர்ணா அவரை பார்க்கச் சென்றிருந்தார். தமிழரசி அசையாமல் நிற்பதைக் கண்டு சந்தேகமடைந்து, தமிழரசியை தொட முயன்ற போது அவர் மீதும் லேசாக மின்சாரம் பாய்ந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து விலகிச் சென்று மெயின் சுவிச்சை அணைத்து விட்டு தன் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மகள் அருணகிரி எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார் .போலீஸார் வழக்குப் பதிவு செய்து தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story