மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால்
மதுரை அருகே அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு, முகூர்த்தக்கால் நடும் விழா அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டியில் கூறினார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து உலக பிரசித்தி பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று அமைச்சர் தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திரா ராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், காவல் ஆணையாளர் லோகநாதன் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து நிரந்தர வாடிவாசல் வைப்பதற்கு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கலந்து ஆலோசித்து நிரந்தர வாடிவாசல் வைப்பதற்கான முடிவெடுப்பார்கள்.
உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தான் வருகிறது. உள்ளூரில் இருப்பவர்கள் வெளியூர் மாடுகளை கொண்டு வந்து உள்ளூர் மாடுகள் என, கூறுவதால் வரும் பிரச்சனை இது.. அலங்காநல்லூர் , பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறந்த மாடுகள், மாடுபிடி வீரர்கள் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளதா? என, கேட்டதற்கு முன்பு எப்படி இருந்ததோ அது போல் தான் இருக்கும் என்றார் அமைச்சர் மூர்த்தி.
மேலும் மாடு பிடி வீரர்கள், காளைகள் போலியாக ஜெராக்ஸ் எடுத்து களம் இறக்கும் பிரச்சினை இந்த முறை நடக்காது, மாவட்ட ஆட்சியர் நேரடியாக முன்னின்று நடத்துவார்.எந்த ஒரு தவறும் நடக்காது என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu