குடிநீர் வேண்டி அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் சாலை மறியல்

திருப்பரங்குன்றம் விளாச்சேரி அருகே தண்ணீர் இணைப்பை துண்டித்ததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்பு வாசிகள்.
திருப்பரங்குன்றம் விளாச்சேரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீர் தர மறுத்ததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், அருகே உள்ள விளாச்சேரியில் தர்மசாஸ்தா விஹார் என்னும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது . இங்கு மொத்தம் 162 அடுக்குமாடி குடியிருப்புகளில் 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு குடியிருக்கும் குடியிருப்பவர்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட சங்க நிர்வாகத்தினர் சார்பில், சந்தா வசூல் பணம் தரவில்லை எனக் கூறி குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளனர்.
இதுகுறித்து,, திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் அளித்தும், காவல்துறை வந்து நேரடியாக விசாரணை செய்ததில், அரசியல் பிரமுகர் தலையீடு காரணமாக தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டனர். ஆகையால், போலீசார் குடியிருப்பு வாசிகளை நேரடியாக வந்து, திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்ய கூறி சென்றனர். இதனையடுத்து, குடியிப்பு வாசிகள் தண்ணீர் திறந்துவிடக் கோரி. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu