வீட்டுமனைப்பட்டா: 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்

வீட்டுமனைப்பட்டா: 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்
X

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அமைச்சர்கள் பழனிவேல்தியாகராஜன், பி.மூர்த்தி

பழங்குடியின குடும்பத்தினருக்கு, வீட்டு மனைபட்டா, நலத்திட்ட உதவிகள், கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு ஆகியவை வழங்கப்பட்டன

மதுரை மாவட்டம் , திருப்பரங்குன்றம் தொகுதிக்குள்பட்ட ஜே. ஜே. நகர் காட்டு நாயக்கர் குடியிருப்பு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பட்டா கேட்டு கோரிக்கை வைத்த பழங்குடியினர் குடும்பத்தினருக்கு, வீட்டு மனை பட்டா அரசு நலத்திட்ட உதவிகள்,கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு ஆகியவற்றை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வழங்கினர்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக தவித்து வந்த இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு விடியல் தரும் வகையில் கோரிக்கை வைத்த ஒரு வார காலத்திற்குள் இந்த நலத்திட்ட உதவிகளை, முதல்வர் வழிகாட்டுதல் படி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முழு முயற்சி எடுத்து நிறைவேற்றி தந்ததற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இதில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ,மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ,மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி ஆகியோருடன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!