8 மணி நேரம், 8 நிமிடம், 8 நொடிகளில் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை

8 மணி நேரம், 8 நிமிடம், 8 நொடிகளில் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை
X

சிலம்பம் சுற்றும் சிறுமிகள்.

மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் உள்ள மைதானத்தில் மதுரை சவுத் இந்தியன் சிலம்பம் அகதெமி சார்பில் புதிய உலக சாதனை முயற்சி மேற்கொண்டது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் விளையாட்டு 8 மணி நேரம் 2 கைகளில் விளையாடிய சிலம்பம் வீரர்கள் புதிய உலக சாதனை படைத்தனர்.

மதுரை சவுத் இந்தியன் சிலம்பம் அகதெமி சார்பில் நடத்த சாதனை நிகழ்வில், மதுரையை சேர்ந்த பல்வேறு அணியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள், சிலம்பம் விளையாடிய வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதில், சிறந்த ஆசான் ஜவகர் மற்றும் திருச்சி ஆயுதப்படை காவலர் அரவிந்த் இருவரும் இணைந்து இரட்டை சிலம்பம் தொடர்ந்து எட்டு மணி நேரம் எட்டு நிமிடம் 8 நொடி சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.

சென்ற ஆண்டு, இவர்கள் ஒற்றைக் கையில் சிலம்பம் வைத்து முப்பது மணி நேரம் 30 நிமிடம் 30 வினாடி சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலக சாதனை ஆனது, ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் டிராகன் ஜெட்லீ நேரில் ஆய்வு செய்து சான்றிதழ் , பதங்கங்கள் வழங்கினர். மற்றும் இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டு சாதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
future of ai act