போலி பல் டாக்டர் மீது நடவடிக்கை: மதுரை ஆட்சியர் பரிந்துரை

போலி பல் டாக்டர் மீது நடவடிக்கை: மதுரை ஆட்சியர் பரிந்துரை
X
மகன் பெற்ற பட்டத்தை வைத்து சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்

போலி பல் டாக்டர் மீது நடவடிக்கை கோரி கொடுத்த புகார் மீது, மதுரை நகர காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

மதுரை கே.கே.நகர் கரும்பாலை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்ற வெங்கடேசன் என்பவர், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகரிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், பல் வலியால் தனக்கு ஏற்பட்ட வலிக்காக சிகிச்சை பெற மேல மாசி வீதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றேன்.அங்கிருந்த டாக்டரிடம், சிகிச்சை பெற்றும் குணமடையாமல், மீண்டும் சென்றேன். அப்போது, அந்த டாக்டருடன் அவரது மகனும் இருந்தார். அப்போது, டாக்டர் ஆபரேசன் செய்ய வேண்டும் எனக்கூறி, மருந்து எழுதிக் கொடுத்தார்.அவ்வாறு எழுதிக்கொடுத்த சீட்டில் மகனின் கையெழுத்தை தந்தை போட்டுக் கொடுத்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த நான் அவர்களிடம் கேட்டபோது, என்னை மிரட்டி அனுப்பினார்கள்.

அப்போது தான் தந்தை பல் மருத்துவம் படிக்காத போலியான மருத்துவர் என்பது, தெரிய வந்தது. அவர் மகன் பெற்ற பட்டத்தை வைத்து சிகிச்சை அளிப்பதும் தெரிந்தது.எனவே, போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பி வைத்தார்.

Tags

Next Story