தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனைசெய்தவர் கைது
பைல் படம்
பேரன் இறந்த சோகத்தில் பாட்டி தீக்குளித்து தற்கொலை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி 80. இவருடைய பேரன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்து செய்து கொண்டார் .இதனால், மன உளைச்சலில் பாட்டி ஜெயலட்சுமி இருந்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது தனக்குத்தானே உடலில் மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .
தீயில் உடல் கருகிய நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து, அவருடைய மகன் திருப்பதி குமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாட்டியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடி பழக்கத்தை மறக்க சிகிச்சை பெற்றவர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை பரசுராம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர், துரைப்பாண்டியன் 45. இவருக்கு, குடிப்பழக்கம் இருந்தது .மந்தைக்குளத்தில் மதுபோதை மாற்று சிகிச்சை மய்யத்தில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் வீட்டில் மாடிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் மாடியில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, அவருடைய மனைவி வசந்தா திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனைசெய்தவர் கைது
மதுரை பழைய மீனாட்சி நகர் அழகு பழனி தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன் 55. இவர் அனுப்பானடி ரயில்வே கேட்டருகே. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார் அப்போது, அங்கு ரோந்து சென்ற தெப்பக்குளம் போலீசார் அவரை பிடித்தனர் .அவரிடமிருந்து லாட்டரி எங்கள் உள்ள நம்பர் சீட்டும், செல்போன் ஒன்றும் விற்பனை செய்த பணம் ரூபாய் 4570ஐயும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
மருத்துவமனை பிரசவ வார்டு அருகே செல்போன் திருட்டு
மதுரை மாவட்டம், சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்தவர் சங்கர் 55 .இவர் மகள் பிரசவத்திற்காக அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் .அவர் பார்வையாளர் கள் தங்கும் அறையில் தங்கி இருந்தார். அப்போது அவர் வைத்திருந்த செல்போனை ஒருவர் திருடினார்.அவர் திருடியவரை கையும் களவுமாக பிடித்தார் . பின்னர், அவரை மருத்துவமனை போலீசிடம் ஒப்படைத்தார் . போலீசார் அவரிடம் விசாரித்த போது, அவர் தத்தனேரி கணேசபுரம் விமல் ராஜ் 42. என்று தெரிய வந்தது..அவரை போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu