மும்பையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரியிடம் தங்க நகை திருட்டு
பைல் படம்
மும்பையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரியிடம்101பவுன் தங்க நகை திருட்டு
மும்பையைச்சேர்ந்த தங்க நகை வியாபாரியிடம் மதுரை லாட்ஜில் 101 பவுன் நகை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை ஜவஹர் பஜார் தாதன் ஜி தெருவை சேர்ந்தவர் ஜிஜேந்திர குமார் ரமேஷ் ஜெயின் 36 .இவர் மும்பையில் பிரபல நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .இவர் மும்பையில் தயாரிக்கப்பட்ட நகைகளை மதுரை, திருச்சி ,கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்று வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் மதுரைக்கு வந்தவ்ர லாட்ஜ் ஒன்றில் தங்கிஇருந்தார். அவர் கொண்டுவந்த தங்க நகைகளில் 345 கிராம் நகையை மதுரையில் நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்ய கொண்டு சென்றார். மீதமுள்ள 101 பவுன் நகைகளை தங்கி இருந்த அறையில் வைத்துவிட்டுச்சென்றார். 345 கிராம் நகையை விற்பனை செய்துவிட்டு தங்கி இருந்த லாட்ஜ் அறைக்குத்திரும்பினார்.
அங்குவந்து பார்த்தபோது அவர் வைத்துவிட்டுச்சென்ற 101 பவுன் நகைகள் காணவில்லை.எப்படி தொலைந்தது என்று தெரியவில்லை. இது குறித்து அவர் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லாட்ஜில் நகை திருடப்பட்டதாஅலலது தொலைந்துபோய் விட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
பெரியார் பேருந்து நிலையத்தில்பெண்ணிடம் ரூபாய் 5000 திருட்டு: இரு பெண்கள் கைது
திண்டுக்கல் மாவட்டம், வத்திப்பட்டி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் பக்ருதீன் மனைவி மீரா பானு 36. இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பிளாட்பாரம் நம்பர் இரண்டில் பஸ்ஸுக்காக காத்திருந்தார் .அப்போது அவருக்கான பஸ் வந்தது.அவர் சக பயணிகளுடன் பஸ்ஸில் முண்டியடித்துக் கொண்டு ஏறினார். கூட்டத்தில் அவர் வைத்திருந்த பேக்கில் வைத்திருந்த பர்சை இரண்டு பெண்கள் திருடியது தெரிய வந்தது .
உடனடியாக அவர் கூச்சல் போட்டு மற்ற பயணிகளின் உதவியுடன் திருடிய இரண்டு பெண்களையும் பிடித்தனர்.அவர்களை திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர். அந்த பெண்களிடம் போலீசார் விசாரித்த போது திருச்சி திருவெறும்பூர் பூலாங்குடி கணேசபுரம் முத்து மனைவி அம்சவல்லி 30 ,அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி மனைவி மல்லிகா 36 என்று தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர் .அவர்கள் திருடமுயன்ற பர்சில் ரூபாய் 5000 இருந்தது. அதை திருட முயன்ற போது தான் அவர்கள் இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.
திருநகரில் வீட்டின் கதவை உடைத்து எல்.இ.டி டி.வி திருட்டு .
மதுரை திருநகர் எஸ் ஆர் வி நகர் வ உ சி தெருவை சேர்ந்தவர் சுகுமார் மகன் ஜெயக்குமார் 33. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார் .பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் வைத்திருந்த எல்இடி டிவியை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரிய வந்தது. இந்த திருட்டு குறித்து ஜெயக்குமார் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் திருடிய திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
கண்ணாடி ஏற்றி சென்ற மினிவேன் விபத்து: லோடுமேன் மரணம்
மதுரை கீரைத்துறை வட்டக்குடி நான்காவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் 55.இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார்.சம்பவத்தன்று மதுரையில் கண்ணாடி கடை ஒன்றில் கண்ணாடிகளை வேனில் ஏற்றி சென்றார் .அவர் கண்ணாடிகளுடன் நின்று அவற்றை பிடித்துக்கொண்டு சென்றார். வேன் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. இதனால் கண்ணாடிகளுடன் மோதி படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் விக்னேஸ்வரன் அவனியாபுரம் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லோடுமேன் நாகராஜனின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
மதுரை சர்வேயர் காலனி பாண்டியன் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகள் தரணிதேவி 21. இவர் சோசியல் மீடியாவின் மூலம் அறிமுகமாகி வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அடிக்கடி அவர் அந்த வாலிபருடன் பேசிக்கொண்டிருந்தது பெற்றோருக்கு தெரியவந்தது. இதை அவர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த தரணிதேவி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரணிதேவி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா விஜயாதேவி திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன்தொல்லையால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை.
மதுரை பெத்தானியாபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி 48 .இவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார் .கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர் .இதனால் மனமுடைந்து அழகாகசாமி வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி தனலட்சுமி கரிமேடு போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து அழகர்சாமியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட காண்ட்ராக்டர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது.
மதுரை அண்ணாநகர் யகப்பா நகர் பாண்டியன் நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலா 43.இவர் கட்டிட காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். முனிச்சாலை இஸ்மாயில் புரம் முதல் தெருவை சேர்ந்த சுல்தான் அலாவுதீன் மகன் சீனி மதர்சா 23 என்பவருடைய கட்டிடத்தை ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்துவருகிறார். இவர்கள் கட்டிடம் சம்பந்தமாக பணம் செலவு செய்து வந்ததில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் மேலும் கூடுதலாக பாலா பணம் கேட்டதாக கூறப்படுகிறது.இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சீனி மதர்ஸா,அவருடன் வெற்றி மாறன் என்ற காட்டு பூச்சி, ஜெயமுருகன் என்ற ஜாம் , ஜெயசூர்யா என்ற கொக்கு ஆகியோர் சேர்ந்து ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர் .இந்த தாக்குதல் குறித்து பாலா விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார் .போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய சீனி மதர்ஷா 23,ஆழ்வார்புரம் ஜெயமுருகன் என்ற ஜாம் 21 ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவரை வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu