மதுரை மதிச்சியத்தில் வீடு புகுந்து தங்கம், வெள்ளி பொருள்கள் திருட்டு
மதிச்சியத்தில் வீடு புகுந்து தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு
மதுரை மதிச்சியம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி 55 .சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்திருந்த இரண்டரைபவுன் தங்க நகை, 135 கிராம் வெள்ளி நகைகள் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து அவர் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். புகாரில் அவருக்கு நெருக்கமான பெண் ஒருவர் திருடியதாக குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் புகாரில் குறிப்பிட்ட பெண்ணிடமும் மேலும் சிலரிடமும் இந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தத்தனேரி பாலம் அருகே வைகை வடகரையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
மதுரை செல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அப்பாஸ்.இவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார் அவர் தத்தனேரி பாலம் வைகை வடகரை அருகே சென்றபோது சந்தேகப்படும் படியாக நின்ற ஒருவரை பிடித்து, சோதனை செய்தார். அதில், அவரிடம் ஒரு கிலோ 300 கிராம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினார் விசாரணையில் அவர் அந்த. பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் தத்தனேரி பாரதி நகர் ஸ்டாலின் 42 என்று தெரிய வந்தது .அவரை கைது செய்தனர்.
நடந்து சென்றபெண்ணிடம் பைக்கில் வந்த வந்த மர்ம நபர்கள் செயின்பறிப்பு
மதுரை, கே புதூர் மகாலட்சுமி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மூதாட்டி ஜெபமணி 69 .இவர் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஒன்றே முக்கால் பவுன் தங்கச்செயினை பறித்துச் செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி ஜெபமணி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின்பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
தீராத வயிற்று வலியால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை, ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் இளவரசன் மனைவி திலகவதி 38. இவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி வந்தது. அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா தனலட்சுமி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திலகவதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயணிகளை ஏற்றிச் செல்வதில் ஆட்டோ டிரைவர்கள் மோதல்: மூன்று பேர் கைது
மதுரை, திருப்பரங்குன்றம் கீழத் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி மகன் பிரபு 38. நிலையூர் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் அம்மாசி மகன் பழனிச்சாமி 28. இவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டிவருகிறாராகள். இவர்கள் திருப்பரங் குன்றத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்தி வரிசைப்படுத்துவதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இருவரும் இவர்களுடன்ட சேர்ந்து மேலும் சிலரும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டனர்.ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசி தாக்கி கொண்டனர்.
இந்த மோதல் தொடர்பாகபிரபு திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பழனிச்சாமி 28 தினேஷ் 21 ஆகிய இருபது மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக பழனிச்சாமி கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரபுவை கைது செய்தனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் மொத்தம் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன் விரோதம்:அரசு பஸ் கண்டக்டரை கொல்ல முயன்ற 9 பேர் கைது
மதுரை சம்மட்டிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் காளிராஜன் 42.இவர் அரசு பஸ் கண்டக்டர் ஆவார். பொன்மேனியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரும் காளிராஜனும் இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஒரே பகுதியில் வசித்து வந்தனர்.அப்போது காளிராசனின் உறவினர் ஹரிஹரன் பாண்டி மகளை காதலித்துள்ளார்.இவர்களின் காதலை கண்டித்து மகளுக்கு வேறொரு மாப்பிள்ளையுடன் திருமண ஏற்பாடு செய்துள்ளார் பாண்டி. இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிஹரன் பாண்டியின் மகளை கொலை செய்துவிட்டார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .இதனால் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று சம்மட்டிபுரம் இரண்டாவது தெரு வழியாக சென்ற காளிதாசனை பாண்டி உள்பட 10 பேர் வழிமறித்தனர். அவர்மீது கொலை கொலை வெறித் தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காளிராஜன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் பாண்டி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 9 பேர்களான ரமேஷ் 21 ,அன்பு 19, காடு என்ற காட்டு ராஜா 21, மாக்கான் என்ற சூர்யா, விக்னேஷ் 24 லோகேஷ் என்ற சன் டி 20, மலைச்சாமி 19, பால்ராஜ் 19 ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu