இளைஞரை தாக்கி கைபேசி பறிப்பு: போலீஸார் விசாரணை

இளைஞரை தாக்கி கைபேசி பறிப்பு: போலீஸார் விசாரணை
X

பைல் படம்

மதுரையில் பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

நடந்து சென்ற வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு: மற்றொரு வாலிபர் கைது

மதுரை கொடிமங்கலம் காலனி மலைச்சாமி மகன் பழனி குமார் 25. இவர் கடச்சநேந்தல் ஊமச்சிகுளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள் அவரை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து பழனிக்குமார் திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல் போன் பறித்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கடச்சனேந்தல் ஜானகி நகர் 13வது தெரு கண்ணாடி சாமி மகன் மகாலிங்கம் 36 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

ஒரு தலையாக காதலித்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடு மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சிவகுமார் 26 .இவர் இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை அவரிடம் தெரிவிக்காமல் காதலித்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் மணமுடைந்த வாலிபர் சிவகுமார் நள்ளிரவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா இந்திராணி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சிவகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் தற்கொலை

மதுரை சம்மட்டிபுரம் ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் சாதிக் உசேன் 47. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது .அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தொன்றும் அது போல் நடந்துள்ளது. இதனால் மணமுடைந்த சாதிக் உசேன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி சுமைலத் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாதிக்க உசேனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்மேனியில் ஒருவர் தூக்கு

பொன்மேனி காளிமுத்து நகரைச்சேர்ந்தவர் பால்பாண்டி 52. இவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் ஹரிகிருஷ்ணன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பாண்டியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கைது

மதுரை கட்ராபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் மகன் குரு தர்ஷன் 19. இவர் பெரியார் பேருந்து நிலையம் தினத்தந்தி பாலம் அருகே வாளால் கிழக்கு வெட்டி பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீர் நகர் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் அந்த வழியாக பணியில் ஈடுபட்டிருந்தார்.அவர் வாலிபர் குருதர்சன்வாளால் கேக்வெட்டிக்கொண்டிர்ந்ததை கண்டார்.அவர் உடனடியாக அந்தவாலிபரை பிடித்து கைது செய்தார். அவரிடம் இருந்த வாளையும் பறிமுதல் செய்தார்.

வழிப்பறித் திட்டத்தில் பதுங்கி இருந்த வாலிபர் கைது: வாள் பறிமுதல்.

மதுரை ஜூலை 4 திடீர் நகர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அஜய்குமார். இவர் பெரியார் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். மேலவள்ளி வீதி அருகே சென்றபோது போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓடிச்சென்று பதுங்கினார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் சோதனை செய்தனர் அவர் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அதை பறிமுதல் செய்து பிடிபட்ட வாலிபரிடம் விசாரித்தனர்.அவர் சம்மட்டிபுரம் காளிமுத்து நகர் தேவர் என்ற மூவேந்திரன் மகன் விமல் 23 என்று தெரிய வந்தது. அந்த வாலிபரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் அந்த பகுதியில் தனியாக செல்லும் நபர்களை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடும் திட்டத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பந்தல்குடி கால்வாய் அருகே அம்மன் சிலையை போட்டு ஓட்டம் போலீஸ் விசாரணை

மதுரை பந்தல்குடி கால்வாய் அருகே அம்மன் சிலையை போட்டுவிட்டு ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பந்தல்குடி இரண்டாவது தெரு கால்வாய் காம்பவுண்ட் அருகே அம்மன் சிலை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. இந்த தகவல் அறிந்த மதுரை வடக்கு வி.ஏ.ஓ. முத்துப்பாண்டி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.அது சரஸ்வதி அம்மன்சிலை என்று தெரியவந்தது. பின்னர் அந்த சிலையை மீட்டு செல்லூர்போலீசில் ஒப்படைத்தார்.இது குறித்து புகார் ஒன்றும் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து அந்த சிலை எப்படி அங்கு வந்தது.அங்கு கொண்டுவந்து போட்டது யார்.எந்தக்கோவிலில் திருடப்பட்டது என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!