தாயின் பிரிவைத் தாங்க முடியாத மகள் தற்கொலை
பைல் படம்
தாய் இறந்த சோகத்தில் நான்காவது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கண்ணாயிரம் மூர்த்தி.இவரது 13வயது மகள் இளவரசி. இவரது தாய் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன அழுத்தத்தில் இளவரசி இருந்து வந்தார். இந்த நிலையில் தானும் தற்கொலைசெய்ய முயன்று வீட்டின் நான்காவது மாடியில் இருந்து குதித்தார் .இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலமாக அடிபட்டது. உயிருக்கு போராடிய நிலையில் சிறுமி இளவரசியை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி இளவரசி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய தந்தை கண்ணாயிர மூர்த்தி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி விவாகரத்து செய்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை
மதுரை ஜூன் 26 மதுரை பைபாஸ் ரோடு மருது பாண்டியர் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் 41. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது .இதனால் மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவ்வாறு அடிக்கடி நடந்ததால் மனம் உடைந்த மனைவி கணவரை விவாகரத்து செய்துவிட்டார் .இதனால் ராஜகுமார் தனியாக வசித்து வந்தார்.மனைவியை பிரிந்ததால் இவர் மனம் உடைந்த நிலையில் தற்கொலை செய்ய முடிவு செய்து விஷம் குடித்தார்.இந் நிலையில் அவர் வடக்கு வெள்ளிவீதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இறந்து கிடந்தார்.இந்த தகவல் அறிந்த திலகர்திடல் போலீசார் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இது குறித்து மனைவி சசிகலா திலகர்திடல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து ராஜ்குமாரின் தற்கொலைக்கான காரணம்குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மூளை நோய், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
மதுரை செல்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் தர்மர் மகன் விக்னேஷ் 27. இவர் வலிப்பு, மூளை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 வருடங்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்தார் .இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய தந்தை தர்மர் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்சூரன்ஸ் கம்பெனியின் ஜன்னலை உடைத்து பணம்திருட்டு.
மதுரை கீழவெளி வீதியில் நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனம் உள்ளது .சம்பவத்தன்று ஊழியர்கள் பணிமுடிந்து சென்றபின்னர் அதன் ஜன்னலை உடைத்து மர்ம நபர்உள்ளே சென்றுள்ளார்.அவர் அங்கு வைத்திருந்த பணம் ரூ 400ஐ திருடிச்சென்றுவிட்டார். இது குறித்து அதன் நிர்வாகி உமா சந்திரன் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
பள்ளி காவலாளியின் வாகனம் திருட்டு:விருதுநகர் வாலிபர் கைது.
மதுரை ராஜாமில் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் 60. இவர் வடக்கு வெள்ளிவீதியில் உள்ள பள்ளி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் ஓட்டிச் சென்ற இருசக்கரவாகனத்தை பள்ளிமுன்பாக நிறுத்தி இருந்தார். பணி முடிந்து வீட்டுக்கு செல்ல பார்த்தபோது அந்த வாகனம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் திலகல்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது வாகனத்தை திருடிய விருதுநகர் மாவட்டம் சத்திரக்குடி அய்யனார்புரம் நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து 21 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை, பரவை கம்பர் தெரு தாமோதரன் மனைவி செல்வராணி 39.இவர் திண்டுக்கல் மெயின் ரோடு விளாங்குடி அருகே மொபட் ஓட்டிச் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து இரண்டு பைக் ஆசா சாமிகள் சென்றனர் .அவர்கள் செல்வராணி அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து செல்வராணி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின்பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu