திண்டுக்கல் மாநகராட்சியினர் தெரு நாய்களை பிடிக்கும்போது மதுரையில் ஏன் தயக்கம்

திண்டுக்கல் மாநகராட்சியினர் தெரு நாய்களை பிடிக்கும்போது  மதுரையில் ஏன் தயக்கம்
X

திண்டுக்கல் மாநகராட்சியில், தெரு நாய்களை பிடிக்கும் நிர்வாகம்.

மதுரை நகரில், நாய்களை பிடிக்க மதுரை மாநகராட்சி ஆர்வம் காட்ட வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

மதுரை நகரில் தெருக்களி சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை நகரில் கடந்த சில மாதங்களாக, தெருக்களில் நாய்கள் தொல்லை பெருகி வருகிறது. தெருக்களில், செல்வோரை, விரட்டி கடிக்கவும், இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தவறி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. மதுரை நகரில், புதூர், கே கே நகர், அண்ணா நகர், மேலமடை, கோமதிபுரம், தாசில்தார் நகர், வண்டியூர், கருப்பாயூரணி, உள்ளிட்ட பல பகுதிகளில் தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி தெரிகிறது.

அவ்வழியாக நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தை சொல்பவரை விரட்டி கடிக்க வருவதால் பொதுமக்கள் பலர் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து, மதுரை மாநகராட்சி உரிய அலுவலரிடம் இப்பதி மக்கள் புகார் தெரிவித்தும், தெருக்களில், சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கொண்டு செல்ல ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது. ஆகவே, மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மாநகராட்சி லைசன்ஸ் இல்லாமல் தெருக்களி சுற்றி தெரியும் நாய்களை அதற்குரிய வாகனங்களை பிடித்து பொதுமக்களை காப்பாற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்லில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து வரும் மாநகராட்சி பணியாளர்கள்.. திண்டுக்கல் மாநகராட்சி 44-வார்டு பகுதியில் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாக இருப்பதாக மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர் சிங்கராஜ், சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மேட்டுப்பட்டி மற்றும் அசனாத்புரம் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த தெருநாய்களை பிடித்தனர்.பின்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது .ஆனால் , பிடிக்கப்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு