மதுரை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் முகாம்: மேயர், ஆணையாளர் பங்கேற்பு

மதுரை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் முகாம்: மேயர், ஆணையாளர் பங்கேற்பு
X

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணிகளை, மேயர், ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சி சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.5 (மேற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் லி.மதுபாலன் முன்னிலையில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றத்தில், உள்ள மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி தொடர்பாக 9 மனுக்களும், குடிநீர் வசதி மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வேண்டி 5 மனுக்களும், சாலைகள் வசதி வேண்டி 5 மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 2 மனுக்களும், சுகாதார வசதி வேண்டி 3 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 3 மனுக்களும், பொறியியல் பிரிவு தொடர்பாக 9 மனுக்களும், இதர கோரிக்கைகள் வேண்டி 1 மனுவும் என மொத்தம் 37 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. சென்ற குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 57 மனுக்களுக் கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மண்டலம் 5 வார்டு எண்.71, 72 மற்றும் 73 வார்டுகளில் சாலை மேம்பாட்டு பணிகள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்டலம் 5 வார்டு எண்.72 பைக்காரா சந்திப்பு (டி.பி.கே.ரோடு) பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புக்களை உடனுக்குடன் சரிசெய்யுமாறும்,

வார்டு எண்.71 தண்டல்காரன்பட்டி 2வது தெருவில் உள்ள குடிநீர் சின்டெக்ஸ் தொட்டியினை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.மேலும், அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணிகளை, மேயர், ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன் , மண்டலத் தலைவர் சுவிதா, தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், துணை ஆணையாளர் சரவணன், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார் ,நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற் பொறியாளர் (திட்டம்) மாலதி, செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, நிர்வாக அலுவலர்ஆறுமுகம், சுகாதார அலுவலர் விஜயகுமார், மாமன்ற உறுப்பினர்கள் முனியாண்டி, கருப்புசாமி, போஸ், பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!