மதுரை அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த ஆணையர்
வெள்ளைக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆணையாளர்கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு செய்தார்
மதுரை அவனியாபுரம், வெள்ளைக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை மையம் மற்றும் அவனியாபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையைத்தில் ஆணையாளர்; கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு செயல்பாடுகள், தினந்தோறும் வரக்கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் தரம் குறித்தும், சுத்திகரிக்கப் படும் கழிவுநீரினை புல்பண்ணைகளுக்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து , பாக்டீரியா அழிக்கும் முறை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பொறியாளர் கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் சுத்திகரிப்பு நிலையத்தில் தொடர் கண்காணிப்புடன் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளைக்கல் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு தினந்தோறும் சுமார் 800 டன் குப்பைகள் கொண்டு சென்று தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவனியாபுரம் வெள்ளைக்கல்லில் செயல்பட்டு வரும் குப்பை சேகரிப்பு மையத்தில் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை பிரிக்கும் இடங்கள், திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, திடக்கழிவு மேலாண்மை மையத்தில் சேரும் குப்பைகளை முறைப்படுத்தி அகற்றுவதுடன் இங்கு பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கு அடிப்படை வசதி , மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, அவனியாபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் தொடர் மருத்துவ பரிசோதனைகள், தாய்மார்கள், பிற நோயாளிகள் என இடம் ஒதுக்கப்பட்டு மருத்துவ சேவை அளித்தல். மருந்துகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், கர்ப்பிணி தாய்மார்களிடம் மருத்துவ சேவை , வசதிகள், உணவு முறை, தொடர் சிகிச்சை குறித்து, ஆணையாளர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியளர் பாலமுருகன், உதவிப்பொறியாளர் செல்வவிநாயகம், சுகாதார அலுவலர் விஜயக்குமார், மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu