பைக் திருடிய மூவர் கைது உள்ளிட்ட மதுரை மாநகர க்ரைம் செய்திகள்

பைக் திருடிய மூவர் கைது உள்ளிட்ட மதுரை மாநகர க்ரைம் செய்திகள்
X
பைக் திருடிய மூவர் கைது உள்ளிட்ட மதுரை மாநகர க்ரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டு உள்ளன.

மதுரை அருகே ஆனையூரில் வீட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளைடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை ஆனையூர் இமயம் நகரைச்சேர்ந்தவர் ரவி மனைவி ரெஜினா (வயது30.).இவர்,குடியிருந்த வீட்டை காலிசெய்யச்சொல்லி வீட்டின் உரிமையாளர் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால், கூடல் புதூர் காவல் நிலையத்தில்புகார் செய்யப்பப்பட்டது. இதனால், ரெஜினா தாய் வீட்டில் இருந்துவந்தார்.இந்த நிலையில், இமயம்நகர் வீட்டில் பொருள்களை எடுக்கச்சென்றார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த தங்கம், வெள்ளி நகைகளும் அவர் பைக்கையும் மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டனர் இந்த சம்பவம் குறித்து, ரெஜினா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரில் ,சில நபர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி அவர்களை தேடிவருகின்றனர்.

மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு விட்டிபாளையம் அம்பலம் சந்துவைச் சேர்ந்தவர் சாரங்கபாணி மகன் பாலமுருகன்(வயது 31.)இவர், கோழிக்கறி வியாபாரம் செய்து வருகிறார்.இவர், அவனியாபுரம் மெயின்ரோடு ராஜகல்யாணிதெரு சந்திப்பில் நின்றுகொண்டிருந்தார்.அப்போது, அங்கு பைக்கில் வந்த வாலிபர் அவரை மிரட்டி கழுத்தில் கத்தியைவைத்து அவரிடமிருந்து ரூ3600-ஐ பறித்துச்சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து, பாலமுருகன் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடத்தினர்.பின்னர், அவரிடம் பணம்பறித்த மீனாட்சிநகர் நல்லதம்பி தோப்பு முதல்தெரு நாகராஜ் மகன் விக்கி என்ற விக்னேஷ்வரன் (25) என்ற வாலிபரை கைது செய்தனர்.

மதுரை தமிழ்ச் சங்கம்ரோடு காதுகொண்டான் தோப்பு தெருவை சேர்ந்த பிச்சை மகன் செந்தில்முருகன் (29)இவர்‌, ஏ.சி.மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.இவர் பைக்கை வீட்டு வாசல் முன்பு நிறுத்தியிருந்தார். அந்த பைக் திருட்டு போய்விட்டது. இதுகுறித்து, அவர் திலகர்திடல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர்.

பின்னர், அவர் பைக்கை திருடிய கருப்பாயூரணி மணிகண்டன் மகன் குமார் என்ற வினோத்குமார்(21,)காளவாசல் முத்துராமலிங்கம் மகன் பாலேஸ்வரன்(22,)காளவாசல் ரமேஷ் மகன் முத்துக்குமார் (21 )ஆகிய மூன்றுபேரையும் கைது செய்தனர்.

மதுரை தெப்பக்குளம் தெப்பக்குளம் சந்தைப்பேட்டை சுடலைமுத்துபிள்ளை சந்துவைச்சேர்ந்தவர் பாண்டியன் மகன் தாமோதரன்( 14.)இவர் பசுமலை பள்ளியில் ஒன்பதாம்வகுப்பு படித்து வந்தார்.இவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.அதற்கு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனாலும், காய்ச்சல் அதிகமானது .இதனால் ,அவரை மதுரை அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து ,தாய் செல்லத்தாய் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து மாணவன் தாமோதரனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை காமராஜர் சாலை பகத்சிங்குறுக்குசாலையை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (63.)இவர் முனிச்சாலையில் ஓட்டல் ஒன்றில் வேலைபார்த்து வந்தார்.இவர் சம்பவத்தன்று வீட்டில் கால்தவறி கீழே விழுந்தார்.தலையில் அவருக்கு பலமாக அடிபட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் ,அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ்பாபு உயிரிழந்தார். இந்த சம்பவம்குறித்து அவர் மகன் வெங்கடேஷ்பாபு தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து ,ஓட்டல் தொழிலாளி ரமேஷ்பாபுவின் சாவுக்கான காரணம்குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags

Next Story