3 ரவுடிகள் கைது உள்ளிட்ட மதுரை மாநகர குற்றச் செய்திகள்

3 ரவுடிகள் கைது உள்ளிட்ட மதுரை மாநகர குற்றச் செய்திகள்
X
3 ரவுடிகள் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட மதுரை மாநகர குற்றச் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

மதுரையில், வெவ்வேறு சம்பவங்களில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அண்ணாநகர் போலீசார், மேலமடை முத்துராமலிங்கம் தேவர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ராம்கோ கூட்டுறவு அச்சகம் அருகே சென்றபோது, அங்கு நின்ற வாலிபர் போலீசை கண்டதும் தான் வைத்திருந்த அரிவாளை அருகிலுள்ள கருவேலமர முட்புதருக்குள் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர் .பிடிபட்ட வாலிபரிடம் விசாரித்த போது,

அந்த வாலிபர் மேலமடை எழில் நகர் முத்துராமலிங்கம் மகன் கார்த்திக் என்ற மௌலி கார்த்திக் (வயது 31 )என்று தெரியவந்தது. இவர் மீது, அடிதடி கற்பழிப்பு ,கஞ்சா கடத்தல், வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் ரவுடி என்றும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.அவர் வீசிய அரிவாளையும் கைப்பற்றினர்.

மதுரை கே புதூர் போலீசார் மூன்றுமாவடி சந்திப்பு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கையில் வாள் ஒன்றுடன் நின்ற வாலிபர் ஒருவரை பிடித்தனர்.அவரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரை கைது செய்து அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்து எதற்காக என்ன திட்டத்தில் அவர் பதுங்கி இருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், மகாலட்சுமி நகர் ஆலமரம் களத்துப்பொட்டல் அருகே சென்றபோது, சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபரை பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது, அவர் முத்துப்பட்டி காளியம்மன் கோவில் இரண்டாவது தெரு பாண்டி மகன் சரவணன்( 23 )என்று தெரியவந்தது. அவரிடம் சோதனை செய்தனர். அவரிடம் அரிவாள் ஒன்று இருந்தது. அவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மதுரையில் ஒரே நாளில் ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

மதுரை மாநகராட்சி வாகன பிரிவு உதவி பொறியாளர் ரிச்சர்ட் பால்( 44.). இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கு அருகே சென்றபோது, இரண்டு டீசல் கேனுடன் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து விசாரித்தார். விசாரணையில், அந்த நபர் வெள்ளக்கல் மச்சக்காளை மகன் வைரவன் (48) எந்த தெரிய வந்தது. அவரிடம் இருந்த டீசல் குறித்து விசாரித்த போது, மாநகராட்சி குப்பை லாரிகளில் திருடி அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார் யார் என்று அவர் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவருடன்,சத்யராஜ் கலையரசன், போஸ், வேல்பாண்டி, உள்பட மொத்த 24 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து, ரிச்சர்ட்பால் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவுசெய்து, வைரவனை கைது செய்தனர். மற்ற 23 பேரையும் தேடி வருகின்றனர். திருடப்பட்ட 30லிட்டர் டீசலையும் பறிமுதல் செய்தனர்.

மதுரை அண்ணா நகரில் மால் ஒன்றில் பழக்கடையில் ரூ 2 லட்சத்து 60 ஆயிரத்து 693திருடிய காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை கே. கே. நகரை சேர்ந்தவர் பீட்டர் பால்( 42 .).இவர்அந்த பகுதியில் உள்ள மால் ஒன்றில் பழக்கடை நடத்தி வருகிறார். சுமார் 15 வருடங்களுக்கு மேலாக அங்கு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் , கடையில் அடிக்கடி பணம் திருட போய்கொண்டிருந்தது.

இது குறித்து, அவர் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது, அந்த மாலில் காவலாளியாக வேலை பார்த்த மேலூர் தாலுகா நரசிங்கம்பட்டி கோனாச்சி வளவுவைச் சேர்ந்த முருகன்( 55. )என்பவர் திருடியது தெரியவந்தது. அவர் மீது பீட்டர் பால் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ப்பதிவு செய்து, பழக்கடையில் திருடிய காவலாளி முருகனை கைது செய்தனர்.

மதுரை ,கோச்சடையில் டைல்ஸ் விற்பனை கடையில்ரூ 59 லட்சத்து 88 ஆயிரத்து 549ம் திருடிய மேலாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோச்சடையை சேர்ந்தவர் பாண்டி( 53. )இவர் அந்த பகுதியில் டைல்ஸ் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் செய்து வருகிறார் .இவரது கடையில், கே புதூர் மாரியம்மன் கோவில் மூன்றாவது தெருவை சேர்ந்த பாண்டி குமார் என்பவர் மேனேஜராக வேலை பார்த்து வந்தார் .கடந்த2021 ஆம் ஆண்டுமுதல் 2023 வரை ரூ59 லட்சத்து 88 ஆயிரத்து 549 ரூபாயிலான டைல்ஸ் கற்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்து மோசடி செய்துள்ளார்.

இந்த சம்பவம் ஆடிட்டர் தணிக்கையின் போது, தெரியவந்தது .இது உரிமையாளர் பாண்டிக்கு தெரிந்ததும், மேனேஜர் பாண்டிக்குமார் வேலையில் இருந்து நின்று விட்டார். இந்த மோசடி குறித்து, உரிமையாளர் பாண்டி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, முன்னாள் மேலாளர் பாண்டி குமாரிடம் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஆப்பிளில் புதிய மேக் மாடல் டேப்லெட்டுகளை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்