மதுரையில் வெவ்வேறு இடங்களில் நேரிட் விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழப்பு

மதுரையில் வெவ்வேறு  இடங்களில் நேரிட் விபத்துகளில் இரண்டு பேர்  உயிரிழப்பு
X

பைல் படம்

மதுரை நகரில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

மதுரையில் வெவ்வேறு இடங்களில் நேரிட்ட சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு

மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 8வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல்( 69.). இவர் மேலவெளி வீதியில் சாலையை கடந்து சென்றார்.அப்பபோது, அடையாளம் தெரியாத ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் , பலமாக அடிபட்டவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து, அவர் மகள் பாண்டிச்செல்வி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசில் அளித்த புகாரின்பேரில்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அருப்புக்கோட்டை ரிங்ரோட்டில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை ரிங்ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம்மோதியதில் 65வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார்.இந்த தகவல் அறிந்த, அயன்பாப்பாகுடி வி.ஏ.ஓ.ஆனந்தன் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து, இறந்தவர் யார் எந்த ஊரைச்சேர்ந்தவர் அவர்மீது மோதிய வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேல அனுப்பானடியில் கணவரைப்பிரிந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை:

மதுரை, மேல அனுப்பானடி நாகம்மாள் கோவில்தெருவைச்சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காமாட்சி (37.) கணவர் மனைவிக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.இதனால், மனமுடைந்த மனைவி காமாட்சி வீட்டில் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து, வளர்ப்புத் தாய் பஞ்சவர்ணம் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, காமாட்சியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.எஸ்.காலனியில் முன்விரோதத்தில் டிராவல்ஸ் நிறுவன கண்ணாடி உடைப்பு:வாலிபர் கைது:

மதுரை வடக்குமாசி வீதி கருவேப்பிலைகாரத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்ற பேய் மணிகண்டன்(31).இவர் எல்லீஸ்நகர் கடைசி பஸ்ஸ்டாப் அருகே டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.விளாச்சேரி மொட்டமலையைச் சேர்ந்தவர் ஆண்டிராஜா மகன் சேதுபிரசாத் என்ற சியான்சேது(29.). இவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே, முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், மணிகண்டனின் டிராவல்ஸ் அலுவலக கண்ணாடியை சேதுபிரசாத் கல்லால் அணித்து உடைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மணிகண்டன், எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார்.செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலிபர் சேது பிரகாஷை கைது செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!