நகைக்கடையில் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
பைல் படம்
தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
மதுரை,செல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் செல்வகுமார் 34. இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, அவருடைய மனைவி அன்னலட்சுமி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
மதுரை , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன். இவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் தென்பரங்குன்றம் சிலோன் காலனியில் சென்றபோது அங்கு ஒரு கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசாருடன் சுற்றி வளைத்து பிடித்தார். அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கருப்பையா மகன் முத்துக்குமார் 38 ,அமாவாசை மகன் அழகப்பாண்டி 45, ஒச்சா தேவர் மகன் ராகவன் 38 ,பழனி 56, கணேசன் 60 என்று தெரியவந்தது. இவர்கள் ஐந்து பேரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து சூதாடிய பணம் ரூபாய் 2010 ஐயும் சீட்டுக்கட்டுகளையும் அவர் பறிமுதல் செய்தார்.
போலி நகைகளை மாற்றி புதிய நகை வாங்கி மோசடி:இரண்டுபெண்கள் கைது
மதுரை, சி.எம்.ஆர்.ரோடு மகாகணபதி நகரைசேர்ந்தவர் பிச்சைமணி மகன் ஜெகநாதன் 38.இவர் வெங்கலக்கடைத் தெருவில் நகைக்கடை நடத்திலருகிறார்.இவர் கடைக்கு இரண்டு பெண்கள் வந்தனர்.இவர்கள் தாங்கள் கொண்டுவந்த பழைய நகைகளைக்கொடுத்து புதிய தங்க நகைகளை மாற்றிவாங்கினர்.அவர்கள் பதினொன்றே முக்கால் பவுன் நகைகள் வாங்கினர்.இதைத்தொடர்ந்து, அவர்கள் கொடுத்த பழைய நகைகளை உடனடியாக கடையில் சோதனை செய்தனர்.
அப்போது அவை போலி நகைகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, அந்த பெண்கள் இருவரையும் பிடித்து விளக்குத்தூண் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்தப்பெண்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் தத்தக்கப்பட்டி சண்முகநகர் மதன் மனைவி ராதா 36,ஆந்திரமாநிலம் விஜயவாடா தடயபள்ளியை சேர்ந்த நாகராஜ் மனைவி கலா 56.என்று தெரிய வந்தது.அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பைக்கில் சென்ற வாலிபரிடம் மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் ரூ 7500வழிப்பறி
மதுரை,வண்டியூர் வைகை தென்கரையில் பைக்கில் சென்ற வாலிபரை காலால் எட்டி உதைத்து ரூ 7500வழிப்பறிசெய்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ராஜகம்பீரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் நவீன்27.இவர் வண்டியூர் வைகை தென்கரையில் பைக் ஓட்டிச்சென்று கொண்டி ருந்தார்.அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற இரண்டு மர்ம அவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினர். பின்னர் அவரிடமிருந்து ரூ7500-ஐ பறித்துச்சென்றனர். இந்தச்சம்பவம் குறித்து, நவீன், அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரிடம் வழிப்பறிசெய்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu