ஜவுளி கடையில் பெண் குழந்தையிடம் நகை திருட்டு
கார் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற முதியவர் மரணம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, வாவிடைமருதூர் மேல தெருவை சேர்ந்தவர் முருகன் 74. இவர் புது நத்தம் ரோட்டில் பாலம் அருகே டிவிஎஸ் 50 மொபெட் ஓட்டிச்சென்றார் .அப்போது அங்கு நின்ற காரில் இருந்து டிரைவர் உத்தங்குடி லேக் ஏரியாவை சேர்ந்த சுதர்சன் 43 என்பவர் எந்தவித சமிக்ஞையும் செய்யாமல் திடீரென்று காரின் கதவை திறந்தார். இதனால் கார் கதவில் முருகன் ஓட்டிச் சென்ற மொபட் மீது மோதியதிவ் அவர் கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு கார் அவர் மீது மோதியது.இவ்வாறு அடுத்தடுத்து கார் மோதியதால் முதியவர் முருகன் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து முருகனின் மகன் செந்தில்குமார் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் கார் டிரைவர் சுதர்சன் மற்றொருவர் அடையாளம் தெரியாத கார் டிரைவர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாட்டுத்தாவணி அருகே பிரபல ஜவுளி கடையில் பெண் குழந்தையிடம் நகை திருட்டு
மதுரை உத்தங்குடி ஸ்ரீ ராம் நகர் முருகன் மனைவி புஷ்பலதா 35. சம்பவத்தன்று இவர் தனது பெண் குழந்தையுடன் மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரபல ஜவுளி கடைக்கு பொருட்கள் வாங்க சென்றிருந்தார்.அங்கு பொடுட்கள் வாங்கிய தன் குழந்தையை பார்த்தபோது அவர் கையில் அணிந்திருந்த ஒரு பவுன் வளையல் திருடு போயிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்ற ஆசாமி கைவரிசை காட்டி திருடியது தெரிய வந்தது. இந்த திருட்டு குறித்து புஷ்பலதா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பெண் குழந்தையிடம் வலையல் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
ஆரப்பாளையத்தில் வாலிபரை தாக்கி ரூ ஆயிரம் வழிப்பறி
மதுரை உசிலம்பட்டி குருவக்குடியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் மகன் அஜய் என்ற ரோகித் 21. இவர் மதுரை ஆரப்பாளையம் மெயின் ரோட்டில் கார்ப்பரேஷன் காலனிதெரு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மூன்று வாலிபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். அவர் வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து அஜய் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்த ஆசாமிகள் மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து ஐந்து பவுன் நகை திருட்டு:பக்கத்து வீட்டு பெண் கைது
மதுரை சிந்தாமணி புது தெரு நெடுங்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தனசேகரன் மகன் மணிகண்டன். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் முருகன் மனைவி மகாலட்சுமி 26. மணிகண்டன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார் .இதனால் தனது வீட்டின் கதவை பூட்டி மகாலட்சுமியிடம் கொடுத்துவிட்டு சென்றார். பின்னர் மணிகண்டன் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஐந்து பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. இந்த திருட்டு குறித்து அவர் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாவியை கொடுத்துச் சென்ற மகாலட்சுமி கதவை திறந்து திருடியது தெரிய வந்தது.பின்னர் போலீசார் மகாலட்சுமியை கைது செய்தனர்.
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில். இரண்டு பேர் விஷம் குடித்து தற்கொலை
மதுரை செல்லூர் அஹிம்சாபுரம் ஆறாவது தெருவை சேர்ந்தவர் முத்தலிப்பு 60. கடந்த வருடம் இவரது மகன் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி பலியானார்.அன்றிலிருந்து மன அழுத்தத்தில் முத்தலிபு இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து தற்காலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தலிபு உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி பானு செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரிமேட்டில் வாலிபர் விஷம்குடித்து தற்கொலை
கரிமேடு மோதிலால் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் நாகசாமி மகன் ராஜா 36. இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய அக்கா ஈஸ்வரி கரிமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu