மதுரையில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

மதுரையில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
X

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுததி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுததி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில் 20% ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில கூட்டுறவு வங்கியுடன் மாவட்ட மத்திய வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கிட வேண்டும், மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளர் 3:1 நடைமுறையினை ரத்து செய்திட வேண்டும், காலி பணியிடங்களை உடனே பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும்,

2016 (மாநில ஆள் சேர்ப்பு நிலையம்) மற்றும் 2021 (மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்) மூலம் தேர்ந்தெடுக்கபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு முதுநிலை பட்டியலை உடனே வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பழங்காநத்தம் பகுதியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களும் கலந்துகொண்டு தமிழக அரசையும், கூட்டுறவுத்துறையையும் வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story