மதுரையில் ஆட்டோ டிரைவர் தீயிட்டு தற்கொலை

மதுரையில் ஆட்டோ டிரைவர் தீயிட்டு தற்கொலை
X

பைல் படம்.

குடும்பத் தகராறு காரணமாக தன்னைத்தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை கொன்னவாயன் சாலையில் உடலில் டீசலை ஊற்றி தீ வைத்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமயநல்லூர் திருவாளவாய நல்லூரை சேர்ந்தவர் கர்ணன் வயது 50. இவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இவருக்கு கடந்த பல வருடங்களாகவே போதைப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் குடும்பத்துடன் கருத்து வேறுபாடு காரணமாக சண்டைப் போட்டுக் கொண்டு குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் கொன்னவாயன் சாலை இந்திரா நகர் 2வது தெருவில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று மகன் வீட்டின் வாசல் முன்பாக உடலில் டீசலை ஊத்திக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார் கண்ணன்.அவர் உடல் கருகிய நிலையில் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை மலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் அஜித்குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கண்ணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை ண்ணா நகர் இந்திரா நகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் திருப்பதி மகன் சரவணன் 21 .இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து தந்தை திருப்பதி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சரவணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழிப்பறியில் ஈடுபட்டு பதுங்கிய இளைஞர் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன். இவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். எம் கே புரம் செட்டியார் தெரு வழியாக அவர் சென்று கொண்டிருந்தார்.

அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் பின்புறம் போலீசாரைக் கண்டதும் இளைஞர் ஒருவர் ஓடிச்சென்று பதுங்கினார். அவரை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். அந்த இளைஞரை சோதனை செய்தபோது அவர் நீண்ட வாள் ஒன்றை வைத்திருந்தார். அந்த வாளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பிடிபட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வழிப்பறியில் ஈடுபட்டு அந்த பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

கத்தி முனையில் கார் கண்ணாடி உடைப்பு

மதுரை போக்குவரத்து நகரை சேர்ந்தவர் முத்தையா மகன் இளங்கோவன் 36. இவர் தனக்கு சொந்தமான காரை மதிச்சியம் கிழக்கு தெருவில் நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த தாசில்தார் நகர் விவேகானந்தர் முதல் தெருவை சேர்ந்த சிவந்தியான் மகன் விஜய் 18 என்ற வாலிபர் தான் வைத்திருந்த கத்தியால் காரின் பின் கண்ணாடியை தாக்கி உடைத்தார்.

இந்த சம்பவம் குறித்து இளங்கோவன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது காரின் கண்ணாடியை உடைத்த வாலிபர் விஜயை கைது செய்தனர்.

Tags

Next Story