மதுரை விமானநிலையத்தில் மீனவர்களிடம் அமெரிக்கா டாலர் சிக்கியது

மதுரை விமானநிலையத்தில் மீனவர்களிடம் அமெரிக்கா டாலர் சிக்கியது
X
மதுரை விமானநிலையத்தில், மீனவரிடம் இருந்து 16 ஆயிரம் அமெரிக்க டாலர் பிடிபட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், மீன்பிடி தொழிலுக்காக சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டிருந்த மீனவர்களிடம், அமெரிக்க டாலர்கள் இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம், 16 ஆயிரம் அமெரிக்க டாலர் பிடிபட்டது.

விமான நிலைய அதிகாரிகள், மீனவர்களிடம் நடத்திய விசாரணையில், நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனம், அமெரிக்க டாலர் பணத்தை கொடுத்து அனுப்பியது தெரிய வந்துள்ளது. அந்த டிராவல்ஸ் நிறுவனத்துக்கும், ஹவாலா கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்கிற கோணத்தில், விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!