மதுரை விமான நிலையத்தில் சுற்றித் திரிந்த இளைஞரால் பரபரப்பு
விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மன நலம் பாதித்த இளைஞர்.
மதுரை விமான நிலையத்தில் விரி வாக்கத்தின் ஒரு பகுதியாக புதிதாக விமான நிலைய முனைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில், பணி புரிவதற்காக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழி லாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
மேற்குவங்காள மாநிலத்தைச் சேர்ந்த யுகில் மார்டி என்பவர் மனைவி மற்றும் 19 வயது மகன் கிலியன் மார்டியுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில், நேற்று நள்ளிரவு மதுரை விமான நிலைய ஓடுபாதை காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து வாலிபர் கிலியன் மார்டி உள்ளே சுற்றி திரிந்துள்ளார்.
இதனை, சி.ஐ.எஸ்.எப். ஆய்வாளர் துருவேய் குமார் ராய் தலைமையில் வீரர்கள் உடனடியாகச்சென்று அந்த வாலிபரை பிடித்து, அவனி யாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், கிலியன் மார்டி மனநலம் பாதிக்கப் பட்டவர் என்பது தெரிய வந்தது. மனநிலை சரியில்லாததால் வேலைக்கு அனுப்பாமல் மகனை தன்னுடன் வைத்திருப்ப தாகவும், இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டி ருந்த போது எங்களுக்கு தெரியாமல் மகன் விமான நிலையத்திற்குள் சென்று விட்டதாகவும் தந்தை யுகில் மார்டி தெரிவித்தார். இதை யடுத்து, போலீசார் கிலியன் மார்டி மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் மதுரை விமான நிலையத்திற்குள் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu