மதுரை 61வது வார்டில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது: சிறிது நேரம் பரபரப்பு

மதுரை 61வது வார்டில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது: சிறிது நேரம் பரபரப்பு
X

வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான எஸ்.எஸ்.காலனி ஸ்ரீ வித்யாலயம் பள்ளி வாக்குச்சாவடி.

மதுரை 61வது வார்டில் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 61வது வார்டு எஸ்.எஸ்.காலனி ஸ்ரீ வித்யாலயம் பள்ளியில் 769 வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பழுதை சரிசெய்த பிறகு, தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!