திருப்பரங்குன்றத்தில் ஆடி பௌர்ணமி கிரிவலம் ரத்து: கோயில் துணை ஆணையர் அறிவிப்பு

திருப்பரங்குன்றத்தில் ஆடி பௌர்ணமி கிரிவலம் ரத்து: கோயில் துணை ஆணையர் அறிவிப்பு
X
கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதனாலும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாகவும்கிரிவலம் ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா ஊரடங்கு உத்தரவினால்., மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் ஆடி மாத கிரிவல நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் துணை ஆணையர் ராமசாமி அறிவிதுள்ளார் .

முருகனின் அறுபடைவீடுகளின் முதற்படை வீடான, மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வருடந்தோறும், ஆடி மாத பௌர்ணமி கிரிவல நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

தொடர்ந்து, கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதனாலும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாகவும் ஜூலை மாதம் 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த ஆடி மாத பௌர்ணமி கிரிவல நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும், ரத்து செய்யப்பட்ட நாளில், பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!