கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு: லாரிகள் ஸ்டிரைக்..!
கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வைக்கண்டித்து லாரிகள் ஸ்ட்ரைக்
மதுரையில் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக்கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
உசிலம்பட்டி:
எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, உசிலம்பட்டி வட்டார அளவிலான லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
கட்டுமான பணிகளில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள குவாரி மற்றும் கிரஷர்களில் திடீரென தலா ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி,ஒரு யூனிட் எம்.சாண்ட் - 3 ஆயிரத்தில் இருந்தது தற்போது 4 ஆயிரம் ரூபாய்க்கும், பி.சாண்ட் - 4 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாய்க்கும், ஜல்லி - 2200 ல் இருந்து 3000 ரூபாய்க்கும் என தலா ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலை உயர்வைக் கண்டித்து, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி முன்பு உசிலம்பட்டி வட்டார அளவிலான டிப்பர் லாரி, டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று முதல் தொடரும் இந்த வேலை நிறுத்த போராட்டம் 06 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு நடைபெறும் என, சுமார் 60க்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்களை வரிசையாக நிறுத்தி வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை தேனி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் கிராமப்புற பகுதி என்பதால், விலை உயர்வு காரணமாக வீடுகளின் கட்டுமான பணி செய்ய முடியாத அளவிற்கு ஒரு யூனிடிற்கு தலா ஆயிரம் ரூபாய் வரை அதிகப்படியாக உயர்த்
தப்பட்டுள்ள இந்த விலை உயர்வை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu