மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணம் கொள்ளை:

மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணம் கொள்ளை:
X

பைல் படம்

மதுரையில் நடந்த பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்

ஆனையூரில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை

மதுரை ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தமிழ் நகரை சேர்ந்தவர் பிச்சை மனைவி சோலையம்மாள் 45. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார் .பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது .அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் தங்க நகை,வெள்ளிக் கொலுசு, ரூ ஐம்பதாயிரம் மற்றும் வீட்டில் வைத்திருந்த எல்இடி டிவி ஒன்றையும் மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சோலையம்மாள் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.

அண்ணா பேருந்து நிலையத்தில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்: சிறுவன் உள்பட இரண்டு பேர் கைது

மதுரை, எஸ் ஆலங்குளம் டிசைன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் 54 .இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார் .இவர் அண்ணா பேருந்து நிலையம் அருகே நின்றபோது சிறுவன் உள்பட இரண்டு பேர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதால் அவர்கள் இருவரும் டிரைவர் ரவிக்குமாரை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து ரவிக்குமார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனையும் சக்கிமங்கலம் இளமனூர் நாகேந்திரன் மகன் வினோத்குமார் 32 என்ற வாலிபரையும் கைது செய்தனர்.

திருநகரில் இளம்பெண் தூக்ககுப்போட்டு தற்கொலை

மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி நந்தினி 25. இவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.இவர் தனக்கன்குளம் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். எந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை ஜவகர் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் நந்தினியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!