மதுரை அருகே நீர்பாசன கால்வாயை சீரமைக் கோரிக்கை

மதுரை அருகே நீர்பாசன கால்வாயை சீரமைக் கோரிக்கை
X

பாசம் சேர்ந்து பச்சை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் கால்வாய்

நிலையூர் கால்வாய் முழுவதும், பிளாஸ்டிக்கழிவுகளும், குப்பைகளும் நிரம்பி பராமரிப்பின்றி கண்மாய் அழியும் நிலை

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள, நிலையூர் கால்வாய் பழமை வாய்ந்த கண்மாயாகும். இக்கால்வாய் மேலக்கால் பகுதியிலிருந்து, நிலையூர் கம்பிக்குடி வரை அமைந்துள்ளதால் நிலையூர்- கம்பிக்குடி கால்வாய் எனப்பெயர் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக கால்வாய் செல்லும் பாதையான சந்திராபாளையம், தேவி நகர், ஹார்விப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பை கூளங்களும் நிரம்பியதுடன், கழிவு நீர் கலந்து கால்வாய் முழுவதும் பாசம் அடைந்து , பச்சை போர்வை போர்த்தியது போன்று உள்ளது. நிலையூர் கால்வாய் முழுவதும், பிளாஸ்டிக்கழிவுகளும், குப்பைகளும் நிரம்பி பராமரிப்பின்றி கண்மாய் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாய் முழுவதும் துர்நாற்றம் வீசி மர்ம நோய் பரவும் நிலைக்கு உள்ளது.

இது குறித்து கண்மாயைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வசிப்போர் பலமுறை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், செவிசாய்க்கவில்லை என கூறும் அப்பகுதிவாசிகள், போர்க்கால நடவடிக்கையில் அரசு நடவடிக்கை எடுத்து, மர்ம நோய் தாக்குவதற்கு முன் கண்மாயை தூய்மைப்படுத்தி, சீரமைக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பாசன வசதி பெறும் விவசாயிகள் சார்பிலும் கண்மாயை தூய்மைபடுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags

Next Story